முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 440 மனுக்கள் பெறப்பட்டது : மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் தகவல்

திங்கட்கிழமை, 29 மே 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று (29.05.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 440 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 174 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 21 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 37 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 19 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 44 மனுக்களும், புகார் தொடர்பான 14 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 11 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 12 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 07 மனுக்களும் மற்றும் 101 இதர மனுக்கள் என மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து