முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று(29.05.2017) நடைபெற்றது.

வீட்டுமனை பட்டா

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

குறை தீர் நாள் கூட்டத்தில் திருவையாறு வட்டத்தில் 5 பயனாளிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 பெறுவதற்கான முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட கலெக்டர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து 1 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 92 நபர்களுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளை ஆக மொத்தம் 98 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கம் வெற்றுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் 35வது தேசிய விளையாட்டு போட்டிகள் 2015ம் ஆண்டு கேரளவில் பளுதூக்கும் போட்டியில் 69 கிலோ எடை பிரிவில் தேசிய அளவில் வெண்கல பதக்கம் வென்ற தஞ்சாவூர் வீரர் ரெங்கராஜ் அவர்களுக்கு ரூ.2 இலட்சமும், அவரது பயிற்சியாளர் செந்தில்குமார் அவர்களுக்கு ரூ.30,000மும் பரிசுத் தொகை விருது வழங்கி தமிழக முதல்மைச்சர் கௌரவிக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரையிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் ரவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து