சிங்கவரம் அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 29 மே 2017      விழுப்புரம்
senji chariot 2017 05 29

சிங்கவரம் அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா: ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 தேரோட்டம்

செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதர் கோயில் பிர்ம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழாம் நாள் திருவிழாவாக தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரினில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் எழுந்தருளி காட்சி அளித்தார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாடவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. 

பலர் பங்கேற்பு

விழாவில் செஞ்சி எம்எல்ஏ.செஞ்சிமஸ்தான், அறநிலைய்த்துறை உதவி ஆணையர் பிரகாஷ், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் அரங்க.ஏழுமலை, திமுக செஞ்சி ஒன்றிய செயலர் ஆர்.விஜயகுமார், நிர்வாகிகள் சிங்கவரம் குணசேகரன், இளங்கீர்த்தி,ரங்கநாதன்,ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து