முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ தலைமை தளபதி கூறியது சரிதான்: வெங்கய்யா நாயடு

திங்கட்கிழமை, 29 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடப்பது மறைமுகப்போர். இதை எதிர்கொள்ள புதுமையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி கூறியிருப்பது சரிதான் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குறிப்பாக காஷ்மீரின் தெற்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். மறுபக்கம் தீவிரவாதிகளும் ஊடுருவல் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் தேடுதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ராணுவத்தினர் மீது இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பிரிவினைவாத இயக்கத்தலைவர் முகமத் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் காஷ்மீரில் நடப்பது மறைமுக போர் என்றும் இதை சமாளிக்க புதுமையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி வர தயாராக இருக்கிறார்களா என்றும் கல்வீச்சை தடுக்க ராணுவ அதிகாரி ஒருவர் தன் ராணுவ வாகனத்தில் இளைஞர் ஒருவரை முன்பக்கத்தில் கட்டிச்சென்றது சரிதான் என்றும் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ரவாத் கூறியிருப்பது சரிதான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் மறைமுக போரை புதுமையான முறையில்தான் சந்திக்க வேண்டும். கல்வீச்சின்போது இளைஞர் ஒருவரை ராணுவ வாகனத்தின் முன்பக்கத்தில் கட்டிச்சென்றதும் சரிதான் என்றும் வெங்கய்யா நாயுடு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து