முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடைகால முகாமையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி  பொது நூலகத்துறை மூலம் கோடைகால முகாமினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

 நினைவு பரிசுகள்

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  அவர்கள் பொது நூலகத்துறை மூலம் கோடைகால முகாமினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை                       நாகர்கோவில் மாவட்ட மைய நூலக அலுவலக அரங்கில்  வழங்கி, தெரிவித்ததாவது:-

கோடைகால முகாம்

நமது மாவட்டத்திலுள்ள குழந்தைகளின் திறமைகளை வெளிபடுத்தும் வகையில் இன்று, பொது நூலகத்துறை மூலம் கோடைகால முகாம் (07.05.2017 முதல் 28.05.2017 (ஞாயிற்றுக்கிழமை தோறும்))  நடைபெற்றது. குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புத்தங்களை வாசிப்பது கட்டாய பழக்கமாக ஆக்கி கொள்ளவேண்டும்.

வீட்டிற்கு ஒரு நுாலகம்

ஒவ்வொரு புத்தகங்ளிலும், ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து கொண்டு வந்தால், நிச்சயமாக அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு, அவர்களது அறிவிற்கேற்றவாறு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நூலகத்திற்க அனுப்பி வைக்க முன் வர வேண்டும். ஒவ்வொரு இல்லங்களிலும்,  குழந்தைகளுக்கு ஒரு நூலகம் அமைத்து தர வேண்டும். புத்தங்களை குழந்தைகள் வாசித்து வந்தால் நிச்சயமாக அவர்களது, பொது அறிவு பெருகும். பிற்காலத்தில் அவர்களுக்கு, ஏதேனும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.என தெரிவித்தார்

பாராட்டு சான்றிதழ்கள்

பின்னர், கலெக்டர் கதை சொல்லுதல் போட்டி, பாட்டு போட்டி, ஓவிய போட்டி, சதுரங்க போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 44 மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளையும்,  உலக புத்தக தினத்தில், பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடத்திக் கொடுத்த நாகர்கோவில், மாவட்ட மைய நூலகம் , மேலபெருவிளை நூலகம் சுசீந்திரம் பரப்புவிளை நூலகம் மற்றும் ஊர்புற நூலகம் வீராணி ஆகிய நூலகத்திற்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் த.தேவகி, மகோந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஐன், வரலாற்று ஆய்வாளர் பத்மநாபன், வாசகர் வட்ட தலைவர் கவிஞர் நாஞ்சில் வானம்பாடி, துணைத்தலைவர் கு.சந்திரன், முனைவர் லாரன்ஸ் மேரி, பா.பிதலிஸ், தங்கதுமிலன், கவிஞர் காப்பிய தமிழன், இரண்டாம்நிலை நூலகர் (மாவட்ட மைய நூலகம்) நா.ரபீக் முஹம்மது, மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து