முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சீசன் அறிகுறி: சுற்றுலா பயணிகள் குஷி

திங்கட்கிழமை, 29 மே 2017      திருநெல்வேலி

ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியுள்ளது. இதனால் குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதனால் பொதுமக்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

 குற்றாலத்தில் சீசன்

தென்மேற்கு பருவகாலம் துவங்கிய உடன் கேரள மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். அப்போது கேரளாவின் மிக அருகாமையில் உள்ள செங்கோட்டை, குற்றாலம் மலைப்பகுதிகள், மற்றும்  தென்காசி பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரலும். சில சமயங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழைபெய்யும். இந்த சமயங்களில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். இதுவே குற்றாலத்தில் சீசன் காலமாகும்.குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும்.

சுற்றுலா பயணிகள் வருகை

இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். சமீப காலங்களில் வெளிநாட்டு பயணிகளும் கூட பெரும் அளவில் சீசனை அனுபவிக்க குற்றாலத்தில் குவிந்து வருகிறார்கள்.குற்றாலம் மதுரையிலிருந்து 160 கிலோ மிட்டர் தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் தென்காசியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்கள் சீசன் காலமாக கருதப்பட்டாலும் சில ஆண்டு களில் மே மாதம் இறுதியிலேயே சீசன் துவங்கிவிடும்.

குளித்து மகிழ 9 அருவிகள்

குற்றாலத்தில் சீசன் காலங்களில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும் அந்த சாரல் மழையில் நனைவது மட்டுமல்லாமல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்வார்கள்.குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்திட 9 அருவிகள் உள்ளது. அதாவது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலிஅருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, பாலருவி என 9 அருவிகள் உள்ளது.

ஏற்பாடுகள் தயார்

இந்த ஆண்டு சீசனுக்கு உல்லாச பயணிகளை வரவேற்க நெல்லை மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றது. தற்போது அருவிகள் தண்ணீர் இன்றி பாறையாக காட்சி அளித்த போதிலும் நேற்று இரவு, காலை நேரத்தில் லேசான சாரல் மழை பொழிந்தது. இதமான தென்றல் காற்று வீசி வருகிறது. கேரளாவில் பருவ மழை துவங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் துவங்கி விடும் என்பதில் ஐயமில்லை. இதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து