முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா உறுதி செய்தது

திங்கட்கிழமை, 29 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி வடகொரியா நேற்று சிறியதூர அணு ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

வடகொரியா நாடானது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட பல்வேறு சக்திவாய்ந்த ஆயுதங்களை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது.

இதனையொட்டி நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பாக அமெரிக்க போர்கப்பல் கொரியா தீபகற்ப கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வடகொரிய நேற்று குறைந்ததூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. மேலும் தன்னுடையை நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள வோன்சன் என்ற இடத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும் ஏவுகணையானது பறந்துசென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது என்றும் அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கமாண்டர் தெரிவித்துள்ளார். வடகொரியா சோதித்த அந்த ஏவுகணையானது சுமார் 6 நிமிடங்கள் பறந்துசென்று ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை விபரம் குறித்து முழுவிபரத்தையும் தெரிந்துகொள்ள புலனாய்வு ஏஜன்சியுடன் கலந்தாலோசித்து வருகிறோம். அதோடுமட்டுமல்லாது வடகொரியாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அந்த கமாண்டர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுப்போம். வடகொரியாவின் அந்த ஏவுகணை சோதனையால் வடஅமெரிக்காவுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வடகொரியாவின் செயலை உணர்ந்துள்ளோம். இதுகுறித்து அதிபர் டிரம்பிற்கு விளக்கம் அளித்துள்ளோம் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து