முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் ரூ.88.94 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிபதிகள் குடியிருப்புகள் சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜா அடிக்கல் நாட்டினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூரில் ரூ.88.94 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜா அடிக்கல்நாட்டினார்.

 நீதிபதிகள் குடியிருப்பு

திருச்செந்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்கள் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நீதிபதிகளுக்கு ஒருங்கிணைந்த நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.88.94 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த நீதிபதிகள் குடியிருப்புளுக்கு நீதிமன்றம் எதிர்புறம் அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இதற்காக கணபதிஹோமம் மற்றம் சிறப்பு பூஜைகள் நடந்தது.  தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜா புதிய நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு அடிக்கல்நாட்டினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் சென்னை வருமான வரி தீர்ப்பாய நீதிபதி கணேசன், தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ராஜசேகர், தூத்துக்குடி எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை இன்ஜினியர் குமரேசன், செயற்பொறியாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார், திருச்செந்தூர் வக்கீல்கள் சங்க தலைவர் சதீஷ்பாலன், துணைத்தலைவர் முருகன், செயலாளர் ஜார்ஜ்வாசகன், பொருளாளர் ராமலிங்கம் துரை, நிர்வாக குழு உறுப்பினர் முத்துகுமார், வக்கீல்கள் குருராமன், குமாரவேல், ஹேமா, முகம்து உவைஸ், சுந்தரபாபு, வருமானவரி தீர்ப்பாய மேல்முறையீட்டு நீதித்துறை உறுப்பினர் என்.ஆர்.எஸ்.கணேசன், திருச்செந்தூர் தாசில்தார் அழகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, ஷீஜாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து