சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் மாவட்ட போலீஸ் சூப்பிர்ண்டு தகவல்

sivagangai

 சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் 15 நாளைக்கு ஒருமுறைபோலீஸ் துறை சார்பில் உட் கோட்ட அளவில் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படும் என்று  மாவட்ட போலீஸ் சூப்பிர்ண்டு ஜெயசந்திரன் தெரிவித்தார்
சிவகங்கை  மாவட்ட போலீஸ் துறை சார்பில் உட் கோட்ட அளவிலானபொதுமக்கள் குறை தீர்க்கம் நாள் கூட்டம் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன்; தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது
 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் குறைதீர்க்கம் நாள் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றம் புகார்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து அலைவதையும் காத்து கிடப்பதையும் தவிர்க்க இது போன்ற குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள்  உட் கோட்ட அளவில் நடத்தபடுகின்றன
இன்று ஓரே நாளில் மாவட்டத்தில் சிவகங்கை மானாமதுரை காரைக்குடி திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை ஆகிய 5 இடங்களில் அந்தந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் நடத்தபடுகின்றன
மேலும் பொதுமக்களின் தேவைகளை பொறுத்து 15 நாளைக்கு ஒருமுறைஅல்லது மாதம் ஒருமுறை இது போன்ற கூட்டங்கள் நடத்தபடும் இவ்வாறு அவர் கூறினார்
 கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மோகன் மாரிஸ்வரி சுந்தரமாணிக்கம் கல்யாண்குமார் மற்றம் சப் இன்ஸ்பெக்டர்கள்  பொதுமக்கள் கொடுத்த மனுக்களை விசாரித்து அதே இடத்தில் தீர்வு கண்டனர்
 இந்த கூட்டத்தில் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த 3 பேர்களுக்கு   சான்றிதழ் வழங்கப்பட்டது
இது போல் காதல் திருமணம் செய்த கருப்புசாமி மற்றும் பிரியா ஆகியோர் தங்கள் திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு உள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்
இதைதொடர்ந்து துனை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன்  அவர்களின் பெற்றொர்களை  அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தார்
 இது போல திருவேகம்பத்துரை அடுத்தகுமானி கிராமத்தை சேர்ந்த  கண்ணன் என்பவர் தன்னடைய மகளின் வேலைக்காக காள மெக்கி கிராமத்தi சேர்ந்த ஒருவரிடம் ரூ ஒருலட்சத்தி 50 ஆயிரம் கொடுத்திருந்தார் அந்த வேலை கிடைக்காத நிலையில் அவர் ஒருலட்சம் மட்டும் கொடுத்து விட்டாராம் மீதிதொகையை நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மீதி தொகையை ரூ 50 ஆயிரத்தையும்  திரும்ப பெற்ற தந்தனர்
 கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும் போது வழக்கமாக  போலீஸ் நிலையங்களில் சென்று  மனு கொடுத்தால் விசாரணைக்காக நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டும் ஆனால் இந்த கூட்டத்தில்  மனு கொடுத்த எங்களை போலீசார் ;நாற்காலியில் அமரவைத்து காபி கொடுத்து விசாரணை செய்தனர் இது எங்களுக்கு மிகவும் பயனள்ளதாகவும் கவுரவமாகவம் உள்ளது இவ்வாறு அவர்கள்; கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து