முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்: உலக வங்கி அறிக்கை வெளியீடு

திங்கட்கிழமை, 29 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவில் வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017-18-ம் ஆண்டில் 7.22 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2016-2017-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. அதன் பின்னர் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி  நடவடிக்கைகள் மற்றும் கடந்தாண்டு வடஇந்தியாவில்  நல்ல பருவமழையின் காரணமாக ஓரளவு சரிக்கட்டப்பட்டது.

தற்போது இந்தியாவில் முதலீடு அதிகரிப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சிக்கு பலமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி வரும் 2017-28-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இது 2019-20-ம் ஆண்டிற்குள் 7.7 சதவீதமாக உயரும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தனியார் முதலீடு அதிகரிப்பு ஒரு காரணமாகும்.

உலகத்தில் விரைவாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சேவை மற்றும் சரக்கு வரி முறை அமுல்படுத்துவதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும்  பண்ணைகள், கம்பெனிகளின் உற்பத்தி செலவு குறைவதோடு மாநிலங்களுக்கிடையே சரக்கு போக்குவரத்துக்கு ஆகும் செலவு குறையும் என்றும் பங்குகளிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குவர் ஜே. அகமத் தெரிவித்துள்ளார். பங்கு முதலீட்டை அதிகரிப்பதோடு வறுமையையும் போக்க சேவை மற்றும் சரக்கு வரி விதிப்பு முறை உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து