வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 5755 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,40 கோடி அளவில் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் சி.அ.ராமன். அறிக்கை

திங்கட்கிழமை, 29 மே 2017      வேலூர்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெறகூடிய வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியு;ள்ளார்கள். அந்த வகையில் மறைந்த முதல்வர் முதன் முதலாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற 1991 -96 காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்து மக்களோடும் சமமான பங்குதாரர்களாக உள்ள ஒரு புதிய சமுதாயம் உருவாக்கப்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 1993 ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோருக்கான தனி இயக்கத்தை உருவாக்கினார்கள். மேலும் 1994 ஆம்ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான மாநில கொள்கையை வெளியிட்டார்கள்.

விழிப்புணர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தனிப்பட்ட திறமைகளை கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஊனமுற்றோர், செவிடர், குருடர் என்று அழைப்பதை தவிர்த்து மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்ற அவர்களை மாற்று திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு மாற்றுதிறனாளிகளுக்கென மாற்றுதிறனாளிகள் நலத்துறையினை உருவாக்கி மாற்றுதிறனாளிகள் சமுதாயத்தில் அங்கமாக அனைவராலும் ஏற்கவும் சமுதாய வளர்ச்சியில் மாற்றுதிறனாளிகளும் பங்கேற்று அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2011 முதல் 2017 வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை 79708 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளில் 48227 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 4545 பயனாளிகளுக்கு ரூ.32,67,66,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடும் ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 513 பயனாளிகளுக்கு ரூ.3,76,02,000 மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வீதம் 105 பயனாளிகளுக்கு ரூ.79,29,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1000 வீதம் 210 பயனாளிகளுக்கு ரூ.1,43,73,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது. கை, கால் பாதிக்கப்பட்ட, செவித் திறன்குறையுடைய,

பார்வையற்ற மாற்றுத் திறனாளியை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு வழங்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த 382 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,29,70,000ஃ- ரூபாயும் மற்றும் 382 நபர்களுக்கு 4 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1528 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி உதவி தொகை

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்திட ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 294 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,17,500- வழங்கப்பட்டு சுயதொழில் செய்து வருகின்றனர். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு 1 முதல் பட்டய படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை இதுவரை 4500 மாணவ மாணவிகளுக்கு ரூ.97,92,000- வழங்கப்பட்டுள்ளது. கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.1,16,47,350- மதிப்பில் 205 பயனாளிகளகுகு வழங்கப்பட்டுள்ளது. கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் நல்ல நிலையில் உள்ள மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.14,96,900- மதிப்பில் 490 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 625 பயனாளிகளுக்கு ரூ.29.68 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மிதிவண்டிகள், 705 மாற்றுத்திறனாளிகளுக்கு 31.72 இலட்சம் மதிபீட்டில் மடக்கும் சக்கர நாற்காலிகள், 675 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29.02 இலட்சம் மதிப்பிட்டில் காதுக்கு பின்புறம் அணியும் காதொலி கருவிகள், 450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.07.87 இலட்சத்தில் ஊன்றுகோல்கள், 726 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.0.73 இலட்சம் மதிப்பீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கும் ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடிகள், 715 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.73 இலட்சம் மதிப்பீட்டில் கால்தாங்கிகள், செயற்கை அவையங்கள், பிரையிலி கைக்கடிகாரங்கள், உருப்பெருக்கிகள், 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.60 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொறுத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகள் ஆக மொத்தம் 4326 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2644 அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் ரூ.9 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சி.அ.ராமன், தெரிவித்துள்ளார்கள.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து