செண்பகத் தோப்பு அணை மதகுகள் சீரமைக்க ரூ. 9.97 கோடி ஒதுக்கீடு தி.மலையில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ தகவல்

திங்கட்கிழமை, 29 மே 2017      திருவண்ணாமலை
photo02

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை மதகுகள் சீரமைக்க ரூ. 9.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வி.பன்னீர்செல்வம் எமஎல்ஏ கூறினார்.

நிறைவு விழா

திருவண்ணாமலை திருமலை மஹாலில் திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற 1424ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமை தாங்க தாசில்தார் ஆர்.ரவி அனைவரையும் வரவேற்று பேசினார். கு.பிச்சாண்டி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்

விழாவில் இலவச வீட்டு மனை பட்டா, நகர நிலவரி திட்டம் பட்டா, நிலப்பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, வாரிசு சான்று, பிறப்பு சான்று, ஒபிசி சான்று, இயறகை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, வேளாண் பொறியல் சாதனங்கள், சிறுகுறு விவசாய சான்று, என மொத்தம் 3207 பயனாளிகளுக்கு ரூ. 46.10 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கி பேசுகையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நிலவிவரும் வறட்சியின் காரணமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் பல்வேறு ஏரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செண்பகத் தோப்பு அணை மதகுகள் சீரமைக்க ரூ. 9.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தி.மலை மாவட்டத்திலுள்ள ஜவ்வாதுமலை 12 தாலுக்காவாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அவர்களால் அறிவிக்கப்படவுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 200 கோடி உள்ளது. இதற்கான நிதி விரைவில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

இவ்விழாவில் வேளாண் உயர்மட்டக்குழு உறுப்பினர் வேட்டவலம் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் ஆர்.செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் அமுல், பார்த்தசாரதி, தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன், வேளாண் உதவி இயக்குநர் சி.அரக்குமார், வேளாண் அலுவலர் கே.சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் கே.மணிகண்டன், பி.மாலதி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.கோபால், ஏ.ஏழுமலை, பி.ரூபா, கே.தனசேகர், ஜி.வித்யா, சீனுவாசன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து