முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 20,000 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 20,000-ம் மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமை வகித்தார்.

சக்கர நாற்காலி

 

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 20,000- மதிப்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 80,000- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

முன்னதாக சமூக நலத்துறையின் சார்பில் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் வளாக மானிய தொகையாக தருமபுரி, சோகத்தூர் மெர்ஸிஹோம் நிறுவனத்திற்கு ரூ. 12 இலட்சத்து 60 ஆயிரத்து 420- மதிப்பிலான காசோலைகளை கோவிலூர் நிர்மலா ஆர்பனேஜ் ரிNகிபிலிடேஷன் சென்டர் நிறுவனத்திற்கு ரூ. 12 இலட்சத்து 22 ஆயிரத்து 926- மதிப்பிலான காசோலையினையும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 1000-, இரண்டாவது பரிசு ரூ. 500-, மூன்றாவது பரிசு ரூ. 300-க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, மத்திய கூட்டுறவு இயக்குநர் பொன்வேல், பால்வள துணை தலைவர் டி.கே. பெரியசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் நிர்மலா கோவிந்தசாமி, கோபால், நல்லம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து