முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டிலிருந்தபடியே சான்றிதழ் பெறும் “உள்ளங்கையில் சான்றிதழ்” திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 29 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, வீட்டிலிருந்தபடியே சான்றிதழ் பெறும்“உள்ளங்கையில் சான்றிதழ்” என்ற திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைய வழியாக நேற்று தொடங்கி வைத்தார்.

கட்டிடங்கள் திறப்பு

சேலம், ஜாகீர் அம்மா பாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 50,000 சதுரடி பரப்பளவில் 19 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில் நுட்ப கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள இக்கட்டிடம் முழுமையாக செயல்படும்போது சுமார் 1000 நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 2000 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 3,524 சதுரடி பரப்பளவில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ் மென்பொருட்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ் மென் பொருள்களை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 15 தமிழ் மென்பொருட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு, அவற்றுள் “தமிழிணையம் ஒருங்குறி மாற்றி” மற்றும் “தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்” ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மென்பொருட்களை இணையதளம் வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

“உள்ளங்கையில் சான்றிதழ்”

அரசு இ-சேவை மையங்கள் மூலம் சேவைகளை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைத்து இசேவை மையங்களிலும் 2.5.2017 முதல் அரசு சேவைகளை பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் கைப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அவர்களது சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக சிறிய இணைய முகவரி அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய “உள்ளங்கையில் சான்றிதழ்” என்ற திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைய வழியாக துவக்கி வைத்தார்.

வீட்டிலிருந்தபடியே ...

இதன்மூலம் பொதுமக்கள் இணையத்தின் உதவியுடன் அவர்களது வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலமாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து