முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர், -; சாத்தூர் அம்மா உணவகத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வடக்குரத வீதியில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அம்மா உணவகம் துவங்கப்பட்டது. இங்கு காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டரிந்து தீர்க்கும் வகையில் அம்மா உணவகத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவு வகைகளின் சுவையை பரிசோதித்தார். மேலும் சமையல் அறைகள், உணவு பரிமாறும் பகுதிகள், பொதுமக்கள் சாப்பிடும் பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார். முன்னாள் யூனியன் தலைவர் வேலாயுதம், முன்னாள் நகராட்சி தலைவர் டெய்சிராணி, நகர செயலாளர் வாசன், ஜெ.பேரவை நகர செயலாளர் முனீஸ், ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர்பிரிவு இணைச்செயலாளர் சேதுராமானுஜம், வெங்கடாசலபுரம் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் அழகர்சாமி, நத்தத்துப்பட்டி மணிகண்டன்., முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மணி மற்றும் நகராட்சி அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து