முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      மதுரை
Image Unavailable

  மதுரை.-மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கூ.வேலுச்சாமி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட வருவாய் அலுவலர்   மனுக்களை அளித்தனர்.
 இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்ற கோரியது, சாதிச்சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள், மற்றும் பட்டா மாறுதல் கோரி 79 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 19 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 8 மனுக்களும், முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 80 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 36 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 7, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 17 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 13 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாகவும், தொழிலாளர் நல வாரியம் தொடர்பாகவும் 11 மனுக்களும் மற்றும் இதர 49 மனுக்களும் என மொத்தம் 319 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 ஏழை விதவை பெண்களுக்கு ரூ.79070 மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
       இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ரெகோபயான், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சாந்தா, மாவட்ட சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து