முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது விநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      மதுரை
Image Unavailable

  மதுரை- மதுரை பாண்டியன் ஹோட்டலில், பொது விநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆர்.காமராஜ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர்.கே.ராஜு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:

  பொதுவிநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் தொடர்பான முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் நிறைவுற்ற நிலையில் இன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். 

  “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கி தமிழ்நாட்டின் வருவாயில் 48 சதவீதத்தில் சமூகநலப்பணிக்காக ஒதுக்கி பல திட்டங்களை தீட்டியுள்ளார் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா. 

  போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் 37 நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் 26500 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  திருப்பூர், ராவணபுரம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  திருச்சிக்குட்பட்ட சிறுபலமலையில் வாழும் 48 குடும்பங்களுக்காக மாதம் இரு முறையும், பெருபலமலையில் வாழும் 19 குடும்பங்களுக்காக மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. 
..  
  உணவுக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 979 நபர்கள் தடுப்புகாவல் தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடுஅரசு ஏழை, எளிய மக்களுக்காக வேறு எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவிற்கு மலிவான விலையில் துவரம்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.  மேலும் புளி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தும் பொருட்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்கள். 

  பண்ணைப்பசுமை காய்கறி திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை பெற்று பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.  மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 25 கம்பெனிகள் புதிதாக தொழில் துவங்க அனுமதி வழங்கியதன் மூலம் 65000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:

  மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் உன்னதமான திட்டத்தை அமல்படுத்தினார்.  இத்திட்டத்தின் முழுப்பயன்களும் உரியவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் ரூ.330 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்கள். 

  இதன்படி, 01.04.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள மின்னணு அட்டைகள் வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.  மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 75 ஆயிரத்து 778 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 38 இலட்சத்து 2 ஆயிரத்து 770 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் முழுவதுமாகவும், 50 இலட்சத்து 85 ஆயிரத்து 431 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  குடும்ப அட்டையில் இணைத்துள்ள ஆதார் விபரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்தலின் போது ஏற்படும் தவறுகளால் மின்னணு அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.  இதற்காக தாலுகா அளவில் ஒரு குழு அமைத்து இக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.   குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின் கைப்பேசி செயலி (ஆழடிடைந யுpp)இ பொதுமக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் , வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:

  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டம் ஒரு முன்னோடியான திட்டம் ஆகும்.  மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் தற்பொழுது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் தற்பொழுது பொதுவிநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க மறைந்த நமது தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவிட்டார்கள். 

  மின்னணு குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளை கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தங்கு தடையின்றி வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார். 
         
  பின்னர் நடந்த பயிற்சி வகுப்பில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பொது விநியோகத்திட்ட கணினிமயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வnpனள ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி,  மின்னணு அட்டைகள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  இக்கலந்தாய்வு கூட்டத்தில், அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர்பிரதீப் யாதவ்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மைச் செயலாளர் , நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.கோபால்,  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்ஏ.ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்),பி.நீதிபதி (உசிலம்பட்டி),பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையாளர் கே.பிரியா, மற்றும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து