முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் நடந்த புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

ஊர்வலத்துக்கு திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர் பாரிஜாதம் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் சுந்தரராஜ், நகர்நல அலுவலர் டாக்டர் வினோத்குமார், மாவட்ட பயிற்சி மருத்துவர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர் கல்லூரி மாணவ&மாணவிகள் கலந்து கொண்டு Ôபுகையிலை நமது வளர்ச்சிக்கு தடைÕ, Ôபுகையிலை நமக்கு பகைÕ, Ôபுகையிலையை ஒழிப்போம்Õ என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பாலமுரளி, குரு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வினோத்கண்ணா, நகர ஆரம்ப சுகாதரா நிலைய பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து