முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில், 8927 விவசாயிகள 7.84 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்: கலெக்டர் வா.சம்பத், தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      சேலம்
Image Unavailable

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (30.05.2017) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையிலும், ஏரி, குளம், கன்மாய்களில் தூர்வாரும் பணியை மேம்படுத்தும் வகையில் அரசு துறைகள், விவசாய சங்கப் பிரநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது.

 ஆய்வுக்கூட்டம்

 தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தும் நோக்கத்திலும், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் 28.04.2017 அன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி விவசாயிகளின் விவசாய தேவைக்கு களிமண்/வண்டல் மண்/சவுடு மற்றும் கிராவல் ஆகியவற்றை நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண்/சவுடு/கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு இது வரை சேலம் மாவட்டத்தில் 975 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு 8927 விவசாயிகள் 7,84,118 கனமீட்டர் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை கட்டப்பட்ட 1934- ம் ஆண்டிற்குப்பிறகு வரலாற்றில் முதல் முறையாக மேட்டூர் அணை துhர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் 28.05.2017 அன்று தொடங்கி வைத்தார்கள். மேலும், விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்து பயன்படுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தோடும், பணிகளை துரிதப்படுத்தவும் அரசு துறைகள், விவசாய சங்கப் பிரநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் லோசனை கூட்டம் நேற்று (30.05.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் மூலம் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வண்டல் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அந்தந்த வட்டத்தில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் இத்திட்டத்திற்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டது.

வண்டல் மண்

நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பது மற்றும் அதனை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் போன்றவைகள் பற்றி விரிவாக விவசாய சங்கப் பிரதிநிதிகளிடன் எடுத்துக்கப்பட்டது. மேலும் சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடைய மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் சம்மந்தபட்ட வட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் ஆட்சியர் மேகநாதரெட்டி, இ.ஆ.ப., ஊகர வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் சௌந்தரராஜன், கனிமவளத்துறை துணை இயக்குநர் ஆறுமுகநையனார், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வம், குமரேஸ்வரன், ராமதுரைமுருகன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து