முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் 115 பெண்களுக்கு ரூ.60.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : ஆர்.டி.ராமசந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      பெரம்பலூர்
Image Unavailable

படித்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (31.05.17) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் கலந்து கொண்டு பட்டப்படிப்பு படித்த 100 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வீதம் 800 கிராம் எடையுள்ள தங்கத்ததையும், ரூ.50,000 வீதம் ரூ. 50,00,000 மதிப்பிலான உதவித்தொகைக்கான காசேலைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:படித்த ஏழைப்பெண்களின் துயர்த்துடைக்கும் வகையில் திருமாங்கல்யத்திற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவித்தொகை வழங்கும் உன்னத திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு வரைப்படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராமாக வழங்கப்பட்டு வந்த தங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் கடந்த தேர்தல் அறிக்கையில் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். அதன்படி தற்போது பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25,000 உடன் 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.50,000 உடன் 8 கிராம் தங்கமும், வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறுத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அதன்படி படித்த வேலைக்கு செல்லும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் தேர்தல் அறிக்கையிலே தெரிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. எனவே தமிழக அரசின் மூலமாக பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் தாய்மார்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

அதனை தொடர்ந்து கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி, விதவை பயனாளிகள் 15 நபர்களுக்கு தலா ரூ.7,290 வீதம் ரூ.1,09,50 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மனோகரன், மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) பூங்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து