முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழையங்குடி ஊராட்சி மக்கள் நேர்காணல் முகாமில் 74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் நிர்மல் ராஜ் வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சியில் நேற்று (31.5.2017) நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வழங்கினார்.

முகாம்

பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது... மக்கள் நேர்காணல் முகாமின் நோக்கமானது மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவதற்கானதாகும்.அரசு அலுவலர்கள் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். இம்மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசானது விவசாயிகள் குளங்களை தூர்வாரி விளையில்லாமல் வண்டல் மண் எடுத்து விளைநிலங்களை மேம்படுத்தலாம் என ஆணையிட்டுள்ளது.

அதன்படி நமது மாவட்டத்தில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு அதில் உள்ள வண்டல் மண்ணை கொண்டு விவசாயிகள் விளைநிலங்களை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்கள். பருவமழை வருவதற்கு முன்பாகவே குளங்களை தூர்வார வேண்டும் இதனால் மழை நீரை சேகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.இம்மாவட்டத்தில் தோராயமாக குளங்களில் 28 லட்சம் குயுபிக் மீட்டர் மண் எடுப்பதால் 1 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க முடியும். ஆகவே விவசாய பெருங்குடி மக்கள் விளைநிலங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு குளங்களை தூர்வாரி விலையில்லாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து 16 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும்,12 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 5 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், 1 நபருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையும், 8 நபர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரங்களும்,20 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்,10 நபர்களுக்கு வேளாண்மைத்துறையின் சார்பில் இடுப்பொருட்களும்,2 நபர்களுக்கு மழைத்தூவான்களும் ஆக மொத்தம் 74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன் , வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிசந்திரன்,வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி,மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ்,வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து