திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

புதன்கிழமை, 31 மே 2017      திருவள்ளூர்

திருவள்ளுரில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொது செயலாளர் பகுஜன் பிரேம் வரவேற்றார்.

நிர்வாகிகள்

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தி தொடர்பாளர் அம்பேத்ஆனந்தன்,மாவட்ட பொருளாளர் ஜெய்பீம் செல்வம்,அலுவலக செயலாளர் வீரா.விஜி,மாவட்ட செயலாளர்கள் புங்கத்தூர் டி.தேவா,வக்கீல் ராஜேஷ்,தொகுதி தலைவர்கள் திருவூர் டில்லி,வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சிறப்புரையாற்றினார்.மாநில நிர்வாகிகள் ரஜினிகாந்த்,டி.தேவேந்திரன்,டி.பாரதிதாசன்,புழல் டி.பெரியாரண்பன், டி.தமிழ்மதி ஆகியோர் பங்கேற்று விளக்கவுரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சரஸ்வதிரவி,திருவூர் கென்னடி,ஆசிரியர் ராஜி உட்பட பலர் பங்கேற்றனர்.உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால் அனைத்து ஊர்களிலும் பூத் கமிட்டி அகை;க வேண்டும்,அனைத்து வார்டு,கவுன்சிலர்,பதவிக்கு போட்டியிட வேண்டும்,வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவது,மத்திய அரசு கொண்டுவந்துள்ள பசு வதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து