முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஸ்டேன்ட ஆப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் தொழில் நிறுவனம் கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 31 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம்,  அணைப்புதூரில் மத்திய அரசின் ஸ்டேன்ட ஆப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் தொழில் நிறுவனத்தினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடனுதவி

தொழில் நிறுவனத்தினை மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டஃபழங்குடியினர் புதிய தொழில்களை துவக்குவதற்கு வங்கிகளில் கடனுதவி பெறுவதில் ஏற்படும் சிரமங்களை களையும் வண்ணம் ஸ்டேன்ட் அப் இந்தியா (ளுவுயுNனு ருP ஐNனுஐயு) என்ற திட்டத்தினை மத்திய அரசு 5-4-2016 முதல் அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக இத்திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இது வரை மொத்தம் 44 நிறுவனங்கள் ரூ 8.29 கோடி வங்கிக்கடனுதவி பெற்று துவக்கப்பட்டுள்ளன. 2017-18ம் ஆண்டினைப் பொறுத்தவரையில் இதுவரை ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டத்தில் மகளிர் தொழில் துவங்க நீட்ஸ் திட்டத்தின் கீழ் 7 நிறுவனங்களும் பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ்   11 நிறுவனங்களும்  ஆக மொத்தம் 18 நிறுவனங்கள் ரூ 2.67 கோடி மாநில அரசு மானியத்துடன் ரூ10.75 கோடி முதலீட்டுடன் துவக்க கண்டறியப்பட்டு வங்கிக்கடன்  பெற ஒப்புதல் பெறப்பட்டள்ளது. 

பெண் தொழில்

மேலும், இத்திட்டத்தின் கீழ் அவினாசி சாலை,  அணைப்புதூர் ஜே.எஸ். ஹொசைரி பார்க்கில் துவக்கப்பட்ட பேன்டோன் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் பிரபாவதி மற்றும் சத்யா என்ற பெண் தொழில் முனைவோர்கள் கூட்டாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 15 வேலம்பாளையம் கிளையில் ரூ 96.0 இலட்சம் கடனுதவி பெற்று ரூ 1.28 கோடி முதலீட்டில் ஆயத்த ஆடைகளின் மீது டிஜிட்டில் பிரிண்டிங் செய்யும் இந்த நிறுவனத்தினை 2016 செப்டம்பர் 26ம் தேதி துவக்கி சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்திற்கு மாநில அரசின் ஊக்கத் தொகையாக நீட்ஸ் திட்டத்தின் கீழ் இணைத்து ரூ 25 இலட்சம் ஏப்ரல் 2017-ல் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக்கு செலுத்தும் வட்டியிலும் மூன்று சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ஒரு வழி கோட்பாட்டுத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இந்நிறுவனத்திறகு விரைந்து பெற உதவி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசின் உதவி மூலம் வழங்கப்படுகின்ற கடன் உதவிகளை பெற்று கொண்டு இளைஞர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது,  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், திட்ட மேலாளர் திருமுருகன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 15 வேலம்பாளையம் உதவி பொது மேலாளர் சன்னி வர்கீஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் வங்கி நிதிசார் கல்வி மைய இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து