முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

புதன்கிழமை, 31 மே 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட ஈடி. 231 நாகமநாயக்கன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் சங்க வளாகத்தில் நடத்தப்பட்டது.

பால் கொள்முதல்

இம்முகாமிற்கு ஈடி.231 நாகமநாயக்கன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணைத்தலைவர்என். வெங்கடாச்சலம் தலைமை வகித்தார்.  ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் .வி. தெய்வநாயகம்  சிறப்புரையாற்றினார்கள்.  அவர் தம் உரையில் இந்த சங்கம் துவக்கப்பட்ட 1974 ஆம் வருடம் 54 உறுப்பினர்களைக் கொண்டு 30 லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது.  தற்பொழுது வளர்ச்சி அடைந்து 205 உறுப்பினர்களைக் கொண்டு 150 லிட்டர் பால் கொள்முதல் செய்து ஈரோடு ஆவன் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறது மிகவும் பாராட்டிற்குரியது.  இச்சங்கத்தில் உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்யப்பட்டுள்ளது.  கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  1998-1999 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2,10,000.00 மதிப்பீட்டில் அரசு மூலம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சங்கம் தொடர்ந்து இலாபத்தில் செயல்படுவதால் உறுப்பினர்களுக்கு போனஸ் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.

குடல்புழு நீக்கம்

இம்முகாமில் ஈரோடு ஆவின் கால்நடைமருத்துவர் டாக்டர். ஆர். மோகன்  தமது உரையில் கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், சினை பார்த்தல், மலட்டுத்தன்மை கண்டறிதல் போன்றவைகள் குறித்து உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.  மேலும் ஈரோடு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் கலப்பு தீவனம், மினரல் மிக்சர் போன்றவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து