ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் சுமார் 25லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

புதன்கிழமை, 31 மே 2017      வேலூர்

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மொத்தம் சுமார் 25லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

ஜமாபந்தி நிறைவு விழா

 

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியது, தமிழக முதல்வரின் 105 நாட்களாக நடைபெற்று வரும் ஆட்சியில் ரூ. 12ஆயிரமாக இருந்த மகப்பேறு திட்டத்தில் 18 ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார். 5ஆயிரம் மீனவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் அறிவித்துள்ளார். 200 கோடி மதிப்பில் மகளிர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான திட்டம், போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத்தொகை 1250 கோடி ரூபாய் வழங்க உத்தரவு, தி.மலை மாவட்டத்தில் 22 கோடி மதிப்பீட்டில் 800க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. குடிமராத்து பணிகளுக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தி.மலை மாவட்டத்தில் 18 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளது.

மேலும் குடிமராத்து பணிகளுக்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. என்று பேசினார்

மேலும் 1827 மனுக்கள் பெறப்பட்டு 463 மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்யப்பட்டு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 474 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 890 மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் பேசினார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநெரே, வருவாய் தீர்வு அலுவலர் கோ.சுப்பிரமணி, வட்டாட்சியர் மு.தமிழ்மணி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஜெ.சேகர், வட்டவழங்கல் அலுவலர் ஏ.சுப்பிரமணி, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், உழவர் உழைப்பாளர் கட்சி நிறுவனர் வேட்டவலம் மணிகண்டன், அதிமுக சேர்ந்த பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்டதுணை செயலாளர் டி.கருணாகரன், அவைத்தலைவர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைக்காக மொத்தம் 634 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 342 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 227 மனுக்கள் நிலுவையில் உள்ளது. 65 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டா மாறுதல் உட்பிரிவு, குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா, ஆக்ரமணம் அகற்றுதல், உழவர் அடையாள அட்டை, வட்டார வளர்ச்சித்துறை, இலவச தையல் இயந்திரம், வேளாண் உதவிகள் என மொத்தம் 1827 மனுக்கள் பெறப்பட்டு

463 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.25லட்சத்து 93ஆயிரத்து 800 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் இலவச தாய் சேய் ஊர்தியை அமைச்சர் துவக்கி வைத்தார்.

 

 

 

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து