முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த சிறப்பு பயிற்சி முகாம்

புதன்கிழமை, 31 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக தண்ணீர் தூதுவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்; கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பாக கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்,  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் குறித்து கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் தண்ணீர் தூதுவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் முனைவர் நடராஜன் பேசியதாவது:- தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நபார்டு வங்கியின் மூலம் தற்போது கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து நபார்டு வங்கியின் மூலம் 40 தண்ணீர் தூதுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை குழுவிற்கு தலா 2 நபர்கள் வீதம் 20 குழுக்களாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் சுமார் 25 கிராமங்களுக்கு தண்ணீர் தூதுவர்களாக செயல்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல், புனரமைத்தல், மழைநீரினை சேகரித்தல், ஆழ்துளை கிணறுகளை மறுசுழற்சி செய்தல், புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவித்தல் உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தண்ணீர் தூதுவர்களின் கடமையாகும்.     வேளாண்மை பணிகளில் நன்னீர் மற்றும் தெளிப்பு நீர்; பாசனம் போன்ற திட்டங்களை பயன்படுத்துதல், நவீன வேளாண்மை தொழில்நுட்ப கருவிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளைப் பெற்று பயனடைதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
 தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பும், விழிப்புணர்வும் மிகவும் அவசியமாகும்.  எனவே தண்ணீர் தூதுவராக செயல்படும் நபர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் தண்ணீர் சிக்கனத்தை தலையாய சிந்தனையாக கொண்டு செயல்படும் வகையில் எண்ணங்களை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ் பாபு, கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர்.நா.சாத்தையா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து