முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல ரூ.1.46 கோடி செலவில் 1723 மீ வரை நடைபாதை கலெக்டர்சிவஞானம்.தகவல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -விருதுநகர் மாவட்டம், தாணிப்பறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோவிலுக்கு செல்லும் 1723 மீ நிளத்திற்கு ரூ.1.46 கோடி செலவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர்சிவஞானம்.தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
 தமிழக அரசு பக்தர்களின் வசதிக்காக எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. சதுரகிரி மலையில் பக்தர்கள் சிறமமின்றி சென்றுவர சுற்றுலா துறையும், வனத்துறையும் இணைந்து ரூ.889.5 இலட்சம் மதிப்பில் வழிகள் சமன்படுத்தி சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பக்தர்கள் செல்லும் வழியில் கிரானைட் அமைத்து, மழைநீர் செல்லும் இடங்களில் சிறு பாலங்கள் அமைத்து பக்தர்கள் சிறமமின்றி சுந்தர மகாலிங்கனார் கோவிலுக்கு சென்று வர நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1.46 கோடி செலவில் தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து 1723 மீ வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாப்டூர் ஒதுக்குக்காட்டின் அறிவிக்கையின்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு சந்தன மகாலிங்;கம் கோவிலுக்கு சுமார் 10 ஏக்கர் நிலமும் சுந்தரமகாலிங்;கம் கோவிலுக்கு 63.76 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 73.76 ஏக்கர் நிலம் ஒதுக்குக் காட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து இக்கோவில்களானது சுமார் 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வன உயிரினச் சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது.
இதுதவிர தாணிப்பாறை நுழைவு வாயிலை ஒட்டி உயிர்பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பில் இயற்கை விளக்க மையம் கட்டி முடிக்கப்பட்டு வனம் மற்றும் உயிரினம் தொடர்பான காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 10 நபர்களைக் கொண்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி கோவில் வரையிலும் இருபுறங்களிலும் நடைபாதையில் பக்தர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை தொடர்ந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருகோவிலுக்கு வரும் பக்தர்கள் வயிறாற உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் புரட்சிதலைவி அம்மா அவர்கள் திருக்கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அத்தகைய உன்னத திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் 24 திருக்கோயில்களில் பக்தர்கள் பசி போக்க அன்னதான திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
24 திருக்கோயில்களில் 1800 பக்தர்கள் தினமும் அன்ன  தானம் உண்ணும் வகையில் அன்னதான திட்டம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அறநிலைத்துறையின் மூலம் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2016-17-ம் நிதி ஆண்டிற்கு கிராமப்புறத் திருப்பணியில் 15 திருக்கோயில்களுக்கு ரூ.1,00,000ஃ- வீதம் ரூ.15,00,000ஃ- வழங்கப்பட்டு திருப்பணி செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 2016-17 ம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் வாழும் பகுதியில் உள்ள 18 திருக்கோயில்களுக்கு ரூ.1,00,000ஃ- வீதம் ரூ.18,00,000ஃ- வழங்கப்பட்டு திருப்பணி செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர்சிவஞானம்.தெரிவித்துள்ளார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து