முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.2.45 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  மு.கருணாகரன்,  தலைமையில்  நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

 நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆலங்குளம் வட்டம், குத்தப்பாஞ்சான் கிராமத்தைச் சார்ந்த 52 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.25 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்,  மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் கலை இலக்கிய பண்பாடு மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் தேர்வு பெற்ற எழுத்தர் லெட்சுமணன் அவர்களுக்கு ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும்  கலெக்டர்  மு.கருணாகரன்,  வழங்கினார்கள்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர்  மற்றும் உயர் அலுவலர்கள் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.விஜயலெட்சுமி,  ஆலங்குளம் வட்டாட்சியர் சுப்புராயன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து