முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வேலை உத்தரவிற்கான ஆணைகள் அ.விஜயகுமார் எம்.பி.வழங்கினார்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வேலை உத்தரவிற்கான ஆணைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்.பி.  அ.விஜயகுமார்    வழங்கினார்.

 100 பயனாளிகளுக்கு

 கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 482 பயனாளிகளுக்கு,               2016-17-ம் ஆண்டில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணைகள் பெறப்பட்டது.   கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.பி.  அ. விஜயகுமார்  100 பயனாளிகளுக்கு, வேலை உத்தரவிற்கான ஆணைகளை வழங்கி, தெரிவித்ததாவது:-

 அம்மா அரசு

 அம்மா  அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ஒவ்வொரு துறையின் வாயிலாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தார்கள்.  குறிப்பாக, குறைந்தவிலையில் அம்மா உணவகத்தின் மூலம் தரமான உணவுகள், சுத்தமான அம்மா குடிநீர் மற்றும் பொதுமக்கள் வசிப்பதற்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்;டம் என ஒரு மனிதனின் அடிப்படைகளை பூர்த்தி செய்வதோடு, குடிசையில்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மூலம், பல்வேறு நடவடிக்கைகள்  அம்மா அவர்களின் அரசு எடுத்துவருகிறது. 

வேலை உத்தரவிற்கான ஆணைகள்

கடந்த ஆண்டு, கணபதிபுரம் பேரூராட்சியில் 35 நபர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டது. இவ்வாண்டில் (2016-17) 482 நபர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், வேலை உத்தரவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

நடவடிக்கை எடுப்பேன்

கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், ரூ.30 இலட்சம் செலவில் கபடி, உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  உங்களது பேரூராட்சியில் குடிநீர், சாலை அல்லது வேறேதேனும் குறைகள் இருந்தால், அதனை உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தால், அந்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும், இப்பேரூராட்சியில் வீடில்லாதவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கு வீடுகள் கிடைப்பதற்காக, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர்  டி. ஜோதிபாஸ்,                             வேல்முருகன்,  எஸ். ராஜசேகரன், வழக்கறிஞர்கள் ஜானகிராம், செல்வகுமார்,  ரவி,  கலைச்செல்வி,  பூமதி,  சுரேஷ்சந்திரன்,  சரஸ்வதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து