முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து விதமான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்ததாவது:

 குடிதண்ணீர் வசதி

வைகாசி விசாகம் முன்னிட்டு 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்ப்பார்க்கபடுவதால் திருக்கோயிலுக்கு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வழகால்வாரியம் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும், திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் ஏற்பாடு செய்ய  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள்  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

மின்சார வசதி

திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன் தட்டு நீரேற்று நிலையம், ஆத்தூர் நீரேற்று நிலையம் திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் தங்கு தடையின்றி மின்சார விநியோகம் செய்ய தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள்  உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.தொலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு

திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், திருச்செந்தூர் நகர் பகுதியில் சேரும் குப்பை கூழங்களை அவ்வப்போது அகற்றிட சிறப்பு நிலை பேரூராட்சி மூலமாக உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க திருச்செந்தூர் பொது சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும், திருக்கோயில் வளாகத்தில் வைகாசி விசாக திருவிழா முன்னிட்டு 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று நாட்கள் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

போக்குவரத்து வசதி

அரசு போக்குவரத்துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்த உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது,  தென்னக ரயில்வே மூலம் 07.06.2017 வைகாசி விசாகத்திருநாளன்று சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

பாதுகாப்பு பணிகள்

தீயணைப்பு துறையினர் கடலில் பாதுகாப்பு வளையத்துடன், உயிர்மீட்பு படகுடனும் (லைப்போர்ட்டு) பாதுகாப்பு பணிபுரியவும் மற்றும் மீன்வளத் துறையினரை நீச்சல், கடலாள், முத்துகுழி பணியாளர்களுடன் பாதுகாப்பு பணிபுரியவும்  உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். வைகாசி விசாகம் முன்னிட்டு 06-06-2017 முதல் 08-06-2017 முடிய மூன்று நாட்கள் தீயணைப்பு ஊர்தியில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  திருக்கோயில் உட்பகுதிகள், வெளிபகுதிகள் மற்றும் இதர இடங்களில்  பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினரும், திருக்கோயில் வளாகங்கள் மற்றும் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் போக்குவரத்து காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஒத்துழைக்க வேண்டும்

வைகாசி விசாகம் முன்னிட்டு திருச்செந்தூர்  பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழுதடைந்துள்ள சாலைகளை பழுதுபார்த்து சரி செய்திடவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் நன்கு இயங்கிட ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.     வைகாசி விசாகம் முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால் திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மற்றும் ஆடையார்குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.     திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்  ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும் என்று கூறினார்.

பலர் பங்கேற்பு

ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.இராஜையா, தூத்துக்குடி வட்டார போக்கு வரத்து அலுவலர் ரங்கநாதன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் சமுத்திரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் வரதராஜன், நெடுஞ்சாலை துறை நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான் உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து