முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் நாராயணசாமி: பிறந்த நாள் விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் புகழாரம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      புதுச்சேரி

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் விழா நேற்று காலை கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பிரம்மாண்டமான 70 கிலோ கேக்கை வெட்டி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு டிராவல் பேக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் நமச்சிவாயம் பேசியதாவது:-

 பற்று கொண்டவர்

காங்கிரஸ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நாள் முதல் கட்சியின் மீது தீராத பற்றும் விசுவாசமும் கொண்டவர் நாராயணநாமி. நேரு குடும்பத்தினர் மீது அளவற்ற பாசம் கொண்டவர். மாநில காங்கிரஸ தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், பொதுச் செயலாளர், காரிய கமிட்டி உறுப்பினர், பல மாநிலங்களில் தேர்தல் பொருப்பாளர் என பல்வேறு கட்சி பதவிகளை வகித்தவர். மக்களவை உறுப்பினர், எம்.பி., மத்திய மந்திரி, முதல்வர் என அரசு பதவிகளையும் வகித்தவர். எந்த பதவிகளை வகித்த போதிலும் பிற்படுத்தப்பட்டவர், மிகப்பிற்படுத்தப்பட்டவர், ஏழை மக்களுக்hக அரும் பாடுபட்டவர். கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அனைவரையும் ஒருங்கிணைத்து சென்றவர்.

கட்சி வளர்ச்சியே குறிக்கோள்

கட்சி வளர்ச்சி ஒன்றே குறிக்கோளக கொண்டவர். அவரது 70-வது பிறந்த நாளில் அவர் நல்ல உடல் நலத்துடனும், மன வலிமையுடனும் நீண்ட நாள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். தனது 70-வது வயதிலும் முதல்வர் நாராயணசாமி சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார். அவருக்கு எனது சார்பிலும், கட்சிசார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள்முதல்வர் எம்டி.ஆர். ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் அனந்தராமன், தீப்பாய்ந்தான், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம், தனுசு, கருணாநிதி, செயலாளர்கள் செந்தில்குமரன், வக்கீல் மணவாளன், சாம்ராஜ், மாவட்ட தலைவர்கள் சீனுவாசமூர்த்தி, ஜோசப் என்ற ரவி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சங்கர், ரகுமான், வக்கீல் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சத்தியவேந்தன், பொதுச் செயலாளர் ஆறுமுகம்,மண்ணாடிப்பட்டு இளைஞர் காங்கிரஸ் ரகுபதி, இந்திரா இன்டேன் சர்வீஸ் பரசுராமன், துணை தலைவர் சரவணன் மற்றும் ஆர்.இ.சேகர், மகிளா காங்சிரஸ் துர்கா தாஸ், நவ வைஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கத்தேர்  இழுத்து வழிபாடு

முன்னதாக முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் தங்கத் தேர் இழுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து