முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த 10 பேருக்கு 2 லட்சம் அபராதம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருநெல்வேலி

பாபநாசம் முண்டன்துறை புலிகள் காப்பக வனப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததாக 10 பேருக்கு வனத்துறையினர் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

அபராதம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மற்றும் முண்டன்துறை வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப் பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் காரையாறு அணை ஆகியவற்றுக்குச் செல்ல வனத் துறை அனுமதி பெற வேண்டும்.மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை சிகரத்தில் உள்ள அகஸ்தியர் தவம் செய்த இடத்துக்கு பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். அங்கு செல்ல பாபநாசம் வனப் பகுதி வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முண்டன்துறை வனச்சரகர் கார்த்திகேயன், வனவர் சுப்பாராஜ் மற்றும் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கேரள வனத்துறை அனுமதியுடன் பொதிகை சிகரத்துக்குச் சென்ற சிலர் முண்டன்துறை வனச்சரகத் துக்குள்பட்ட பகுதிக்குள் நுழைந்தனராம். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் பாபநாசம் வனப் பகுதிக்குள் நுழையும் நோக்கத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார்,ராஜபாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், செல்வராஜ் மற்றும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேருக்கு முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் தலா 20 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து