முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் வட்டத்தில் நடந்த ஜமாபந்தியில் 16 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,    நடைபெற்ற  ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய 165 மனுக்களைப் பெற்றார்.

 ஜமாபந்தி

மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1426 பசலி ஆண்டு நிலவரி கணக்கு முடிப்பு பற்றிய ஆய்வு (ஜமாபந்தி) 25.05.2017 முதல் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பண்ருட்டி வட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம் வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்), புவனகிரி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர், விருத்தாச்சலம் வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திட்டக்குடி வட்டத்தில் கடலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்), வேப்பூர் வட்டத்தில் விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறார்கள். மேலும், 25.05.2017 முதல் சில தாலுக்காவில் 06.06.2017 வரையிலும் சில தாலுக்காவில் 09.06.2017 வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

165 கோரிக்கை மனுக்கள்

இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் ரெட்டிச்சாவடி குறுவட்டம் கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேலழிஞ்சிப்பட்டு, கீழ்அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிக்குடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்களை கலெக்டர்  பெற்று அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பதற்காக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை அளித்தார்.

உதவித்தொகைகள்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.5.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 156 மனுக்களும், 26.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 159 மனுக்களும், 29.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 133 மனுக்களும், 30.05.2017 அன்று நடைபெற்ற ஜமாபந்தியில் 180 மனுக்களும், 31.05.2017 அன்று நடைபெற்ற ஐமாபந்தியில் 130 மனுக்களும்,  நடைபெற்ற ஜமாபந்தியில் 165 மனுக்களும் என ஆகமொத்தம் 923 மனுக்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  அவர்களால் பெறப்பட்டது. இவற்றில் இன்றைய தினம் நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 17 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு 16 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், ஒரு நபருக்கு பாட்டா மாறுதலுக்கான ஆணையும் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   வழங்கினார்.\

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) எஸ்.ரவி, கடலூர் வருவாய் வட்டாட்சியர் பி.பாலமுருகன், வட்டாட்சியர் (ச.பா.தி) எஸ்.சிவா, கலெக்டர் அலுவலக மேலாளர் பி.தேவனாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து