முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்களைத் தவிர்த்து வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு இலைகளில் பொட்டலம் கட்ட வேண்டும்: கலெக்டர் வா.சம்பத். அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களுடனான வழிகாட்டுதல் கூட்டம் கலெக்டர் வா.சம்பத்.,தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் வா.சம்பத்.தெரிவித்ததாவது:

பதிவு சான்றிதழ்

சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலமாக உணவு வணிகம் புரிபவர்களுக்கு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 28,000 வணிகர்கள் உள்ளனர். பதிவு செய்யாத ஏதேனும் உணவு வணிகர்கள் இருப்பின் அனைவரும் கட்டாயம் உரிமம் மற்றும் பதிவு செய்ய வேண்டும். இது வரை சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் உணவு விற்பனை செய்தது தொடர்பாக 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 வழக்குகளுக்கு தண்டனையும், 36 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீர், பேக்கரி கடைகளில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்ட செய்தித்தாள்களைப் பயன்படுத்துகின்றனர். செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டுவதால், செய்தித்தாள் மையில் உள்ள காரீயம், காட்மியம் உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் உணவுப் பொருளில் கலந்து புற்றுநோய், கல்லீரல், மூளை நரம்பு பாதிப்புகள், செரிமானக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே. செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேநீர், பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவுகளை பிளாஸ்டிக் கவர்களில் வழங்கக்கூடாது. சேலம் மாவட்டத்தில் செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் தாள்களைத் தவிர்த்து மாறாக வாழை இலை, பாக்கு மட்டை, தேக்கு இலைகளில் பொட்டலம் கட்ட வேண்டும்.

தடையை மீறி பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருள்களை பொட்டலம் கட்டி வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவக உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற றறற.களளயi.படிஎ.in என்ற இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையம் மூலமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்.தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, வியாபாரிகள், நுகர்வோர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து