முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.49.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லத்துவாடி, அரூர், வலையப்பட்டி, ஆண்டாபுரம், பேட்டப்பாளையம், பெருமாண்டம்பாளையம், கே.புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (01.06.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லத்துவாடி ஊராட்சி, மேல் ஈச்சவாரி பகுதியிலும் அரூர் ஊராட்சி, வடிவேல்கவுண்டனூர் பகுதியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றி பராமரித்து வரும் பணிகளையும், அரூர் ஊராட்சியில் நத்தமேடு, செலம்பக்கவுண்டனூர் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீரப்பன் என்பவர் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி வரும் பணியினையும், இதே ஊராட்சி, அரூர்புதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.19 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகப்பட்டு வரும் பணியினையும், அரூர் தெற்கு பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12,000 மானியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக்கழிப்பிடத்தினையும், மேலும் இதே aஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.12.18 இலட்சம் மதிப்பீட்டில் அரூர் அணைக்கட்டு நீர்வரத்து காய்வாய், வரத்து வாய்க்கால் தூர் வாரும் பணியினையும், வலையப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.90,000 மதிப்பீட்டில் மண்புழு உரக்குழி அமைத்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வரும் பணியினையும், பேட்டப்பாளையம் ஊராட்சி, மணியங்காளிப்பட்டி பகுதியில் 14-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், பெரமாண்டம் பாளையம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர்த்தேக்க தொட்டியினையும், அருந்ததியர் காலனியில் ஊராட்சி ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.56,000 மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி பராமரிப்பு செய்யப்பட்டு வரும் பணியினையும், கே.புதுப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.49.16 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை லெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாக முடித்திட வேண்டுமெனவும், மேலும் நடப்படுகின்ற அனைத்து மரக்கன்றுகளையும் நல்ல முறையில் பராமரித்து தொடர்ந்து நீர் ஊற்றி பாதுகாப்பாக வளர்த்திட வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.விஜயக்குமார், ஆர்.தேன்மொழி, ஒன்றியப்பொறியாளர் சாந்தி, உதவிப்பொறியாளர் கல்பனா, பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உட்பட மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து