தி.மலையில் மழை வேண்டி இந்து மக்கள் கட்சியினர் சிறப்பு புனித யாகம்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo04

 

திருவண்ணாமலையில் மழை வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு புனித யாகம் நடைபெற்றது . திருவண்ணாமலை ரயில்வே நிலையம் அருகில் உள்ள பல்லவன் நகரில் இந்து மக்கள் கட்சி சார்பில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் மற்றும் தாய் சமயம் திரும்பும் விழாவும் நேற்று நடைபெற்றது.

சிறப்பு புனித யாகம்

இந்த விழாவுக்கு மாநில பொதுச் செயலாளர் இராம.ரவிக்குமார் தலைமை தாங்க, மாநில செயலாளர் ஜெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மண்டல பொருப்பாளரும் தி.மலை மாவட்ட தலைவருமான இர.விஜயராஜ் அனைவரையும் வரவேற்றார். கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.தேவா, மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பூர்ணசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவையட்டி உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு புனித யாகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்த பசு வதை தடுப்பு தடை சட்டம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டடம் கொண்டுவர வேண்டியும் கோமாதாவை காப்போம் கோடி நன்மை பெறுவோம் என வலியுறுத்தியும் கோபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் நகர தலைவர் வ.ராஜேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து