புதிய ‘102’ தாய்சேய் நல வாகன சேவை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo01

 

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிய 102 தாய்சேய் நல வாகன சேவையை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பார்வையிட்டார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த மாதம் 18ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புதிய ‘102’ தாய்சேய் நல வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்,

தாய்சேய் நல வாகன சேவை

அதனையட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ‘102’ தாய்சேய் நல வாகனத்தை ஆரணியில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உடனிருந்தார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ‘108’ சேவைக்காக ரூ.3.55 கோடி மதிப்பீட்டிலான 25 வாகனங்கள், ‘102’ தாய்சேய் நல வாகன சேவைக்காக ரூ.86.89 இலட்சம் 10 புதிய வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்கள் அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும், ஒரு வயதிற்குட்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அவர்கள் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களை அவர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், ‘102’ தாய்சேய் நல வாகன சேவை திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2013-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் முதலிடம் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் இந்த திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 61 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த ‘102’ தாய்சேய் நல வாகன சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளன் பயன்பாட்டிற்காக ரூ.86.89 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய வாகனங்களின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த மாதம் 18ந் தேதி அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து