முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய கூடைப்பந்து போட்டி ஐஓபி, தென் மத்திய இரயில்வே அணிகள் கோப்பையை கைப்பற்றியது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      கோவை
Image Unavailable

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த மே 26 – ந் தேதி முதல் நடைபெற்றது. இறுதி போட்டியை சக்தி குழுமங்களின் தலைவர் எம்.மாணிக்கம் துவக்கிவைத்தார். இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஆண்கள் 52வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய வருமானவரி அணி 72  புள்ளிகள் எடுத்தது.

16வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையை தென் மத்திய இரயிவே அணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சத்தீஸ்கர் மாநில அணியை எதிர்த்து – செகந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய இரயில்வே அணி 83 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சத்தீஸ்கர் மாநில அணி 57 எடுத்தது.

நாச்சிமுத்து கோப்பை

52வது நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழல்கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற சென்னை - வருமானவரி துறை அணிக்கு இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற தவறிய டெல்லி - இந்தியன் இரயில்வே அணி மற்றும் டெல்லி - இந்திய விமானப்படை ஆகிய அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், மேலும் இந்திய விமானப்படை அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்பட்டது.

16வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணிக்கு  முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற சத்தீஸ்கர் மாநில அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பையும் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற தவறிய திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் கொல்கத்தா - கிழக்கு இரயில்வே ஆகிய அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு சிறந்த நம்பிக்கைக்கான விளையாட்டு வீராங்கனை விருது சத்தீஸ்கர் மாநில அணி வீராங்கனை மேகா சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளரும் சிறப்பு அதிகாரியுமான டாக்டர். கே. விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக, தலைவர், வி.வி.ஆர். ராஜ் சத்யன், கோயம்புத்தூர் சக்தி குழுமங்களின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ஜி. செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து