முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் ராவணனுக்கு முக்தி அளித்தல் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,ஜூன்,3: ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவையொட்டி முதல் நாள் திருவிழாவான நேற்று ராவணை ராமர் வதம் செய்து முத்தி அளித்த  நிகழச்சி நடைபெற்றது .

 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோரும் வைகாசி மாதம் மூன்று நாட்கள் நடைபெரும் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலுள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில்  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் காலையில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து திருவிழாவின் முதல் நாள் திருவிழாவான ராவணை வதம் செய்து முத்தி அளித்தல் நிகழ்ச்சியான ராவணசம்ஹாரம் நிகழச்சி ராமேசுவரம் திட்டக்குடி பகுதியிலுள்ள துர்க்கை அம்மன் அருகாமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியையொட்டி சுவாமி ராமர்,லெட்சுமணன்,ஆஞ்சநேயர்,சாம்பவான ஆகியோர்கள் தங்க கேடயத்திலும்,ராவணன் கேடயத்திலும் திருக்கோயிலிருந்து   மாலை 4 மணிக்கு எருந்தருளி திருக்கோயிலின் நான்கு ரத வீதி மற்றும்,நகர் பகுதிகளில் வீதியுலா வந்து ராவணசம்ஹாரம் நிகழச்சி நடைபெறும் பகுதியான   ராமேசுவரம் திட்டக்குடி பகுதிக்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தன.அங்கு திருக்கோயில் மூத்த குருக்கள்  10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான் வதம் செய்வது  போன்ற நிகழ்ச்சியை நடத்தி ராவணனு்ககு முத்தி அளித்து வைத்தனர்.பின்னர் சுவாமிக்கு  சிறப்பு பூஜையும்,தீபாராதனையும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு கலித்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உள்பட திருக்கோயில் பணியாளர்களும்,அலுவலர்களும் கலந்துகொண்டனர்.       
 
                                                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து