முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வளர்ச்சித்திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      தேனி
Image Unavailable

தேனி-தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரணம்பட்டி மற்றும் சங்கராபுரம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரணம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.15.25 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணை, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மட்கும் குப்பை, மட்க்காத குப்பை தரம்பிரிக்கும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ள பணி மற்றும் சங்கராபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.0.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்ல கழிப்பறை கட்டட கட்டுமனப்பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு தமிழகத்தை வளமான, பசுமையான மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் பயன்தரக்கூடிய மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்திட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, அனைத்து கிராமப்புறங்களிலுள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் மரக்கன்று நடவு செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற பொதுமக்களை கழிப்பறை பயன்படுத்திட தனிநபர் கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, தனி நபர் கழிப்பறை ஏற்படுத்திட போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத நபர்களை கண்டறிந்து பொதுகழிப்பறையினை பயன்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பராமரித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், கிராம ஊராட்சிகளில் பெறப்படும் மற்றும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றிடவும், ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரித்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தெரிவித்தார்.
ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் முத்துப்பாண்டி அவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து