முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் 976 நீர்நிலைகளில் உள்ள 230 ஏரிகளில் 13237 விவசாயிகள் 12,55,556 கீயூபிக் மீட்டர் அளவு வண்டல் மண் எடுத்துள்ளனர்: செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், சேலம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி பாப்பனேரியில் நேற்று ( 02.06.2017) விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டப்பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்ததாவது:

அரசாணை

 

 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தும் நோக்கத்திலும், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் 28.04.2017 அன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி விவசாயிகளின் விவசாய தேவைக்கு களிமண்/வண்டல் மண்/சவுடு மற்றும் கிராவல் ஆகியவற்றை நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) 1 ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண்/சவுடு/கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட 1934- ம் ஆண்டிற்குப்பிறகு வரலாற்றில் முதல் முறையாக மேட்டூர் அணை துhர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் 28.05.2017 அன்று தொடங்கி வைத்தார்கள். இது வரை சேலம் மாவட்டத்தில் 976 நீர்நிலைகள் மண் எடுக்க உகந்தவையாக மாவட்ட அரசிதலில் வெளியிடப்பட்டு வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 184 நீர்நிலைகளில் உள்ள 47 ஏரிகளில் 917 விவசாயிகள் 40716 கீயூபிக் மீட்டர் அளவும் , மேட்டூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 296 நீர்நிலைகளில் உள்ள 57 ஏரிகளில் 5826 விவசாயிகள் 2,45,706 கீயூபிக் மீட்டர் அளவும் , சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 207 நீர்நிலைகளில் உள்ள 44 ஏரிகளில் 1837 விவசாயிகள் 1,21,407 கீயூபிக் மீட்டர் அளவும், ஆத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 289 நீர்நிலைகளில் 82 ஏரிகளில் 4657 விவசாயிகள் 8,47,727 கீயூபிக் மீட்டர் அளவும் என மொத்தம் 976 நீர்நிலைகளில் உள்ள 230 ஏரிகளில் 13237 விவசாயிகள் 12,55,556 கீயூபிக் மீட்டர் அளவு விவசாய பயன்பட்டிற்காக வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (02.06.2017) சேலம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி, பாப்பனேரியில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல்மண் எடுக்கும் திட்ட பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. 26 ஏக்கர் நிலபரப்பில் அமைத்துள்ள பாப்பனேரியில் 46 விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்எடுக்க விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 36 விவசாயிகள் 2600 கன.மீட்டர் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து பயன்பெற்றுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்ட பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக விவசாயிகளை பயன்பெற செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது உதவி இயக்குநர் ஊராட்சிகள் தெய்வசிகாமணி, வட்டாரவளர்ச்சி அலுவலர் ( வட்டார வளர்ச்சி ) கே.அபரஞ்சி, வட்டார பொறியாளர் ஆர்.அன்புராஜ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.சாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சே.கு.சதிஸ்குமார் , பத்திரிக்கையாளர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து