முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் மு.ஆசியா மரியம் திடீர் ஆய்வு: நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளித்திட கலெக்டர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்துத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதன்சந்தை, வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சி மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாமகிரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (02.06.2017) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் உத்தரவு

 

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதன்சந்தை, வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் மு.ஆசியா மரியம் புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், புறநோயாளிகள் பிரிவு, ஊசிபோடும் இடம், மருந்தகம், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, பேறுகால பின்கவனிப்பு பகுதி உட்பட பல்வேறு பிரிவுகளை நேரில் பார்;வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் எவ்வாறு சிசிக்சை அளிக்கப்படுகிறது எனவும், உங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் முழுமையாக கிடைக்கின்றனவா எனவும் கேட்டார். அதற்கு மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த நோயாளிகள் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் சிறப்பாக அளித்து வருவதாகவும், பரிசோதனைகளும் உடனுக்குடன் செய்து வருவதாகவும், தேவையான மருந்து மாத்திரைகளை குறித்தும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கட்டறிந்தார்.

அதனைத்தொடர்;ந்து சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேளுக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாமகிரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், புறநோயாளிகள் பிரிவு, ஊசிபோடும் இடம், மருந்தகம், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, பேறுகால பின்கவனிப்பு பகுதி, கண் பரிசோதனைக்கூடம், கர்ப்பிணிப்பெண்கள் பரிசோதனை அறை உட்பட பல்வேறு பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயாளிகளுக்கு சிறப்பான சிகிக்சைகளை அளித்திட வேண்டுமென மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

நாமகிரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகந்தி என்பவர் பிரசவித்த ஆண்குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் அம்மா குழந்தை நலப்பரிசு பெட்டகத்தை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர்.கோ.ரமேஷ்குமார், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதன்சந்தை, வினைதீர்த்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் (பொ) டாக்டர்.டி.அமுதா, பேளுக்குறிச்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.சி.வடிவேல், நாமகிரிப்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.எஸ்.தயாசங்கர், சுகாதார ஆய்வாளர் கே.முத்துமணி உட்பட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து