முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர்; மாவட்டத்தில் ரூ.62 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம்: அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர்; மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (2.6.2017) ரூ.62 லட்சத்து 21 ஆயிரத்து 486 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 2015-2016 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகைக்கான காசோலையை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையேற்க,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகித்தார்.

உயர்த்தி வழங்கப்படும்

இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது....மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா ஆட்சிப்பொறுப்பேற்று முதல் கையெழுத்திட்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்க நாணயம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ் திருமண நிதியுதிவியுடன் கூடிய தங்க நாணயம் வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம தங்க நாணயமும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுகிற அரசாக திகழ்ந்து வருகிறது.இம்மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த மாவட்டமாகும் .அந்த வகையில் இம்மாவட்டத்தில் 93 ஆயிரத்து 914 விவசாயிகளுக்கு ரூ.101 கோடியே 70 லட்சத்து 51 ஆயிரத்து 193 மதிப்பிலான பயிர்க்காப்பீட்டு தொகை பெற்று விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இக்காப்பீட்டு தொகையினை பெற்று கொண்டு அடுத்தடுத்து சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய நிகழ்ச்சியில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவதும், விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.அம்மாவின் திட்டம் எல்லா காலங்களிலும் பெயர் சொல்லும் திட்டமாகும்.இன்றையதினம் 269 விவசாயிகளுக்கு ரூ.78 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 2015-2016 பயிர்க்காப்பீட்டு தொகைக்கான காசோலையும், தமிழக முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 21 ஆயிரத்து 486 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தங்க நாணயங்களும் ஆக மொத்தம் 369 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்து 61 ஆயிரத்து 486 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன், வேளாண்மை; இணை இயக்குநர் மயில்வாகணன், வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா மற்றும் அரசு அலுவலர்கள் , முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து