முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குடிநீர் விநியோகம் தொடர்பான அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்: கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கலெக்டர் ஆ.அண்ணாதுரை, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

குடிநீர் விநியோகம்

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குடிநீர் விநியோகம் தொடர்பான ஊரக மற்றும் நகர்ப்புறம் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (02.06.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், 589 ஊராட்சிகளிலும், 22 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், வார்டுகளில் தினமும் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் காலையில் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து நிலையங்களில் தூய்மையை பராமரித்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். பேருந்து நிலையங்களில் சுகாதாரமற்ற நிலை தென்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைக்கு புறம்பாக மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுத்து, மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள், தேவையான இடத்தில் மாற்று குடிநீர் ஆதாரம் செய்து கொடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி தேவையான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக போர்வெல் அமைக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 12 குளங்களில் மண் எடுப்பதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்..

குடிநீர் தொடர்பாக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் நீர் ஆதாரம் தொடர்பான எம்.புக்கு சரியாக பராமரிக்க வேண்டும். குடிநீர் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும். விளம்பர பலகையில் ஊராட்சியின் பெயர், செய்யப்படும் பணியின் பெயர், திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரர் பெயர், பணிகள் முடிக்க வேண்டிய காலம் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு அரசு செய்து வரும் பணிகள் தெரியும். இன்னும் 4 மாத காலத்திற்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் மாற்று ஏற்பாடுகள் குடிநீர் ஆதாரத்தை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து அலுவலர்களும், போர்கால அடிப்படையில் பணியாற்றி குடிநீர் பிரச்சினை ஏற்படாதவாறு சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஊராட்சிகள் துணை இயக்குநர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், நகராட்சி ஆணையர், மாநகராட்சி, நகராட்சி, பேரூரட்சிகளின் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.'

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து