மேல்புத்தியந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் 56 பேருக்கு நலத்திட்ட உதவி: தாசில்தார் இரவி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo01

திருவண்ணாமலை வட்டம் மேல்புத்தியந்தல் கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.இரவி வழங்கினார்.

 

 

அம்மா திட்ட முகாம்

 

 

திருவண்ணாமலை வட்டம் மேல்புத்தியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்மாத்தூர், மேல்புத்தியந்தல், உடையானந்தல், சு.கீழ்கச்சிராப்பட்டு ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இம்முகாமிற்கு தாசில்தார் ஆர்.இரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 56 மனுக்கள் ஏற்கப்பட்டது. 15 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த முகாமில் சிறுவிவசாயி சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 56 பயனாளிகளுக்கு தாசில்தார் ஆர்.இரவி வழங்கினார்.

முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.ஏழுமலை, ஜி. வித்யா, அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேல்புத்தியந்தல் கிராம நிர்வாக அலுவலர் கே.தனசேகர் நன்றி கூறினார்.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து