முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்ததாவது:

 ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி, நமது மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.  பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவு அலுவலர்கள் குளங்களில் மழைநீர் தேங்காதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  சிறப்புகுழு மூலம் தொடர்ந்து 24 மணிநேரமும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் -1 மற்றும் சிற்றார் -2 ஆகிய அணைகளின் நீர் மட்டத்தை கண்காணிக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்புதுறை அலுவலர்கள் ஜெனரேட்டரில் குறைந்தபட்சமானது எரிபொருளை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்கள் படகுகள் மற்றும் பேரிடர் மேலாண்மையின்போது, தேவைப்படும் அனைத்து பொருட்களும் தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

நோய்கள் பரவாமல் இருக்க

மழைக்காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்திருந்தால், அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி அலுவலகங்களில் மணல் மூட்டைகளை போதுமான இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அலுவலர்கள், தேவையான அளவு மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.  மேலும், டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். 

கண்காணிக்க வேண்டும்

மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  வருவாய்த்துறை அலுவலர்கள், மழையினால் பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு, கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக சென்று, ஆய்வு செய்து, உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்த வேண்டும்.  குறிப்பாக, பகல் நேரங்களில் மழை அதிகமாக பெய்யும் இடங்களில் கண்காணிக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டார். 

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி) திட்ட இயக்குநருமான  ஏ.ஆர். ராகுல் நாத்  மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர்கள் (பத்மநாபபுரம்)  இராஜேந்திரன்,  சிவகாமி (நாகர்கோவில் (பொ)), இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை)  இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) நிஐhமுதின், மாவட்ட வழங்கல் அலுவலர்  சின்னம்மாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர் ஆதரவு) பொறி சுப்பிரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (பொ))  விநாயகம் சுப்பிரமணியன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ))  மாடசாமி சுந்தர்ராஜ், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை)  ரூபர்ட் ஜோதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்  அருள்தாஸ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து