முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்புல்லாணி திருக்கோவில் கும்பாபிசேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே உள்ள புகழ்வாய்ந்த திருப்புல்லாணி திருக்கோவில் கும்பாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
     ராமநாதபுரம் அருகே உள்ள தொன்மை சிறப்பு வாய்ந்த திருப்புல்லாணி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த திருக்கோவிலில் ஆதிஜெகநாதபெருமாள்- பத்மாசனிதாயார் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இலங்கையில் இராவணனிடம் சிறைவைக்கப்பட்டுள்ள  சீதையை மீட்க ராமபிரான் கடலில் பாலம் அமைக்க தெர்ப்பை புல்லில் சயனம் மேற்கொண்டு உபவாசம் இருந்த தலமான  திருப்புல்லாணி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த திருக்கோவில் கும்பாபிசேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 31-ந் தேதி தொடங்கி பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 4 நாட்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட யாகசாலை மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக நேற்று காலை கும்பாபிசேக விழாவையொட்டி காலை நித்ய ஹோமங்கள் நடத்தப்பட்டு பின்னர் மாகா பூர்ணாகுதி, யாத்ராதானம், தசதானம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.
    காலை சரியாக 7.55 மணிக்கு புனித நீர் வானில்  கருடர்கள் வட்டமிட கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்ற பின்னர் ஆதிஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாசனி தாயார் உள்ளிட்டோருக்கு பல்வேறு சிறப்பு அபிசேக ஆராதணைகள் நடத்தப்பட்டு சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில், ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன், மன்னர் குமரன்சேதுபதி, ராணி லெட்சுமி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிசேக விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கும்பாபிசேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் திருப்புல்லாணிக்கு விடப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து