அரும்பாக்கம் தேவாதீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      வேலூர்

அரக்கோணம்; அடுத்த அரும்பாக்கம் அருள்மிகு தேவாதீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா நேற்று விமரிசையாக நடந்தேறின. இது குறித்து விவரம் வருமாறு.

மஹா கும்பாபிஷேக பெருவிழா

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தின் அருகில் அரும்பாக்கம் கிராமம் உளளது. இந்த கிராமத்தில் நூறறாண்டு பழமையான அருள்மிகு அனுபாம்பாள் உடனுறை அருள்மிகு தேவாதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 20ஏக்கர் பரப்பளவுடன் கூடிய அந்த தேவாதீஸ்வருக்கு ஜீரணாத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை 7மணி முதல் 8.30 மணிக்குள்ளாக நடைபெற்றது. ரத்தனகிரி பாலமுருகனடிமைசுவாமி, கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமை தாங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக நீத்துறையைச் சேர்ந்த உயர்நீதி மன்றம் மற்றும் உள்ளுர் நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, ஆற்காடு எம்எல்ஏ ஜெஎல்.ஈஸ்வரப்பன், கோட்டாச்சியர் ராஜலட்சுமி, உள்ளிட்டவர்களுடன், அரக்கோணம் நகரைச் ;சேர்ந்த டாக்டர் சந்திரமௌலி, அரிமா சங்க ஜிகே.பாபுஜி, மற்றும் அரக்கோணம் ஒன்றியம் ஜி.எம்.மூர்த்தி, திருத்தணி முன்னாள் நகர சபை தலைவர் சௌந்;தராஜன், நாகவேடு முன்னாள் ஊhரட்சி மன்ற தலைவர்கள் எஸ்எஸ்.முனுசாமி, தேவவெங்கடரத்தினம், தேமுதிக ஜானகி, ஆகியோருடன் திரளான உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், அதிமுக, திமுகவைச் சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய முன்னணி நிர்வாகிகள், அதிக அளவிலான வழக்கறிஞர்கள், சுற்று புறகிராம மக்கள் என ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து