கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருவள்ளூர்

2017-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று. வீரதீர செயலுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெண்மணிக்கு சிக்கலான தருணங்களில் சாதுர்யமாக செயல்பட்டு உயிர்காத்த அவரது ஆற்றல்மிக்க நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2017-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

தகுதி

இதற்கு என்று தனி விண்ணப்பம் கிடையாது. மேற்காணும் விருதுகளுக்கான விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டரங்கம். திருவள்ளுர் அலுவலகத்தில் 07.06.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் தொலைபேசி எண்ணில் (7401703482) தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து