வருவாய் தீர்வாய நிறைவு நாளில் மனுதாரர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருவள்ளூர்
Thiruvallur 2017 06 04

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பொதுமக்களிடமிருந்து பெறபட்ட 659 மனுக்களில், தகுதிவாய்ந்த 283 மனுதாரர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் பேசியதாவது: பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 நாட்கள்; மக்களிடமிருந்து சமூக பாதுகாப்பு திட்டமான முதியோர் ஓய்வூதியம், வருமானச் சான்று, ஜாதிச்சான்று, பட்டா உட்பிரிவு, முழுபுலம், பட்டா நகல் மற்றும் இதர துறைகளின் மனுக்கள் என மொத்தம் 659 மனுக்கள் பெறப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்

பூவிருந்தவல்லி வட்டம், பூவிருந்தவல்லி உள்வட்டம் முதல் நாளில் பூவிருந்தவல்லி, அக்ரஹாரம், சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், கோபரசநல்லூர், திருவேற்காடு, விரராகவபுரம் மற்றும் சுந்தரசோhவரம் ஆகிய கிராமங்கள்;, திருமழிசை உள்வட்டம் இரண்டாவது நாளில் திருமழிசை, கீழ்மணம்பேடு, உடையவர்கோயில், வரதராஜபுரம், மடவிளாகம், அரியமந்தநல்லூர், தூக்கணம்பட்டு, வெள்ளவேடு, நரசிங்கபுரம் மற்றும் பர்வதராஜபுரம் ஆகிய கிராமங்கள்;, திருமழிசை உள்வட்டம் மூன்றாவது நாளில் குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, மேப்பூர் மற்றும் அகரம்மேல் ஆகிய கிராமங்கள்;, நேமம் உள்வட்டம் அன்று நான்காவது நாளில் கூடப்பாக்கம், படூர், மெய்யூர், நேமம் ஏ, திருமலைராஜபுரம், நேமம் பி, நொச்சிமேடு, கொரட்டூர் ஏ மற்றும் கொரட்டூர் பி ஆகிய கிராமங்கள்; மற்றும் வயலாநல்லூர் உள்வட்டம் ஐந்தாவது நாளில் வயலாநல்லூர் ஏ, வயலாநல்லூர் பி, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சோராஞ்சேரி ஏ, அமுதூர்மேடு, பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல் மற்றும் கோளப்பஞ்சேரி ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நல அலுவலர் அவர்களால் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இன்று தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில் தகுதிவாய்ந்த 283 மனுதாரர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தலைவர் திருமதி..சுந்தரவல்லி,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் டி..ஏழுமலை ஆகியோர் வழங்கினார்கள்.

பூந்தமல்லி; வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சிறப்பாக நடத்திய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நிலுவையில் உள்ள மனுக்கள் தகுந்த பரிசீலனைக்குப் பின்னர் உரிய தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து அரசு நலத்திட்டங்களையும் பொதுமக்கள் தெரிந்துக்கொண்டு இந்த திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் டி..ஏழுமலை, மாவட்ட வழங்கல் அலுவலர் வ.சந்தியா, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து